மீண்டும் கை கூடிய வைக்கம் விஜயலட்சுமி திருமணம்..! ரசிகர்கள் வாழ்த்து!

By Maruthu Pandi Santhosam  |  First Published Sep 8, 2018, 1:36 PM IST

நடிகர் பிருதிவிராஜ், நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் 'இடம்பெற்ற 'காற்றே காற்றே' என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின் விக்ரம் பிரபு நடித்த 'வீர சிவாஜி, படத்தில் இவர் பாடிய சொப்பன சுந்தரி பாடல் இவரை தமிழிலும் பிரபல பாடகியாக மாற்றியது. 

இப்படி பல படங்களில் பாடல்கள் பாடியதன்  மூலம், பல தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த இவரது, வாழ்க்கை  சினிமாவாக மாறுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த படத்தை இயக்குனர் விஜயகுமார் என்பவர் இயக்குகிறார். இதில் விஜயலஷ்மியாக கேரளாவில் மீன் விற்று படித்து, பிரபலமான மாணவி ஹனன் ஹமீது நடிக்கினார். 

இந்நிலையில் இவரை பற்றி மற்றொரு சந்தோஷமான தகவலும் வெளியாகியுள்ளது. இவருக்கும், பலக்குரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

இருவீட்டினரின் சம்மதத்தோடு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம், வரும் 10 ஆம் தேதி, விஜயலட்சுமியின் வீட்டில் நடைபெறுகிறது. திருமணம் அக்டோபர் 22 ஆம் தேதி, வைக்கம் மகாதேவ கோவிலில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வைக்கம் விஜயலட்சுமிக்கும், சந்தோஷ் என்பவருக்கும் திருமண நிச்சயமானது. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.  

click me!