ஹோமோ செக்ஸ் தீர்ப்பால் குஷியான நடிகை! பால் நடிகையுடன் கருப்பு ராஜா ரொமான்ஸ்! கில்மா படத்தில் கிக்கான நாயகி!

By sathish k  |  First Published Sep 8, 2018, 5:06 PM IST

ஹோமோ செக்ஸ் தீர்ப்பால் குஷியான கில்லி நடிகை! பால் நடிகையுடன் ரொமான்ஸ் பண்ணி ரெடியான கருப்பு ராஜா! கிளுகிளுப்பை உண்டாக்கும் கில்மா படத்தில் கிக்கான நாயகி.


கேரளாவைச் சேர்ந்த இன்டீரியர் டெக்கரேஷன் கான்ட்ராக்டரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுமான அனூப் என்பவருக்கும், வைக்கம் விஜயலட்சுமிக்கும் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 22-ஆம் தேதி வைக்கம் மகாதேவ் கோவிலில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளதாம்.

Tap to resize

Latest Videos

undefined

படத்தை அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யவுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக விஷால் நடிக்கவுள்ளார். ‘மதகஜராஜா, ஆம்பள’ படங்களுக்கு பிறகு விஷால் – சுந்தர்.சி  கூட்டணியில் உருவாகவிருக்கும் 3-வது  படத்தில்  விஷாலுக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, சுராஜின் ‘கத்தி சண்டை’ படத்தில் விஷால் – தமன்னா டூயட் பாடி  ஆடியுள்ளார்.

பாகுபலி 2  மெகா ஹிட் படத்தை அடுத்து  பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாஹோ’ படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடிகை ஷர்தா கபூர் டூயட் பாடி ஆடி வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. இதனையடுத்து ‘ஜில்’ பட புகழ் ராதா கிருஷ்ணகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இதனை ‘கோபிகிருஷ்ணா மூவீஸ் – UV கிரியேஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் தயாராகவிருக்கும் இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

டோலிவுட்டில் ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக்காகி வருகிறது. பாலிவுட் வெர்ஷனில் விஜய் தேவரகொண்டா ரோலில் ஷாஹித் கபூர் நடிக்கிறார். ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய சந்தீப் ரெட்டியே இதனையும் இயக்கி வருகிறாராம். முதலில், இதில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக நடிக்க தாரா சுடரியா ஒப்பந்தமானார். தற்போது, கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்திலிருந்து தாரா சுடரியா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல” என்ற உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, “முன்னேறி செல்லுங்கள் #சமஉரிமை #பிரிவு377 #ஜெய்ஹோ” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. மேலும், இந்தத் தீர்ப்பை வரவேற்று யுனைடெட் நேஷன்ஸ் இந்தியா பதிவிட்டுள்ள ட்வீட்டையும் அவர் ரீட்வீட் செய்துள்ளார்.

click me!