பெயிலில் வந்த திலீப்பைக் கண்டு கண் கலங்கிய காவ்யா மாதவன்! (வீடியோ)

Oct 4, 2017, 1:04 PM IST



கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப், செவ்வாய்க்கிழமை நேற்று பெயிலில் வெளிவந்தார். பின்னர் ஆலுவாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு முதலில் சென்றார். 

 

 

அப்போது நூற்றுக்கணக்கான ரசிகர்களும் ஆதரவாளர்களும் அந்த வீட்டின் முன் திரண்டு, அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். திலிப்பீன் சகோதரர் அனூப்பின் காரில் அவர் அந்த வீட்டின் அருகே வந்தபோது, உற்சாகக் குரல் எழுப்பி, தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். அந்த வீட்டுக்குள் சென்ற திலீப், சற்று நேரத்தில் தனது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுடன் வெளியில் வந்தார். அவர் காவ்யா மாதவனைப் பார்த்த போது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டாராம். அப்போது, வீட்டுக்கு முன் திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்து, தனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னரும் அந்த வீட்டை நோக்கி அவரது ரசிகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். வீட்டின் பால்கனி மேல் இரவு நின்று, அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து, சற்று ஜோக் அடித்து உற்சாகமாக இருந்தார். 

 

 

அந்த இரவு நேரத்தில், அவரது நண்பரும் நடிகருமான கலாபவன் ஷாஜன் உள்ளிட்ட நடிகர்களும் இரவு நேரத்தில் அவர் வீட்டுக்கு வந்து ஆதரவைத் தெரிவித்தனர்.