Nov 17, 2017, 7:23 PM IST
தீரம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இதிலும் பேசப்படும். ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள். திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள் என்றார் சூர்யா.
சூர்யா பேசிய காட்சிகள்: