விஜய்க்கு மட்டும் சொல்லவில்லை... அரசியலுக்கு வரும் அனைவருக்கும் பொருந்தும்... தங்கர் பச்சான் பளீர்..!

Dec 27, 2017, 6:28 PM IST



இயக்குனர் தங்கர் பச்சான்  இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்து முடிக்கப்பட்ட... 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம், வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆக உள்ளது.

எப்போதும் இவரின் படங்களில் கிராமத்து சாயல் கலந்து இருக்கும். இவர் முதல் முறையாக  முழு நகர்ப்புற படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாகவும், நடிகை பூமிகா  நாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படம் தமிழரின் கலாசாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான காதல் திரைப்படம் என்றும் இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

இதே போல் பல காலமாக, அரசியல் பேசி வரும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கருத்தை அவர் பதிவிட்டு வருவது அனைவரும் அறிந்தது தான். இது குறித்து நாம் அவரிடம் பேசிய போது, நான் பதிவிட்டது விஜய்க்கு மட்டும் அல்ல அரசியலுக்கு வரத் துடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும்தான் என்று பளீர் எனக் கூறியுள்ளார்.

தங்கர் பச்சான் சிறப்பு நேர்காணல்: