போதையில் பெற்ற மகள் முன் அசிங்கமாக நடந்துக்கொண்ட தாடி பாலாஜி (வீடியோ)

Oct 10, 2017, 2:38 PM IST



விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி.

தற்போது தாடி பாலாஜியின் இரண்டாவது மனைவி நித்தியாவிற்கும் இவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.  இதன் தாக்கம்  இவர்கள் ஒரு நடன நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருக்கும்போதும்  மேடையில் வெடித்தது.

இதைத்தொடர்ந்து நித்தியா, கணவர் பாலாஜி தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாலாஜியோ தன்னுடைய மனைவி நித்தியாவிற்கும் மற்றொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி வந்தார்.

மேலும் இதற்காக சில நாட்களுக்கு முன்பு, சென்னை காவல் ஆணையரிடமும் தன்னுடைய வக்கீலுடன் சென்று புகார் கொடுத்தார். 

இந்நிலையில் தற்போது நித்தியா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், தன்னையும் குழந்தையையும் பாலாஜி எரிக்க முயற்சி செய்தார் என்றும் அதனால் புகை மண்டலம் உருவானது என்றும் கூறியுள்ளார். பின் முழு போதையில் பாலாஜி குழந்தையின் முன் அசிங்கமாக செய்கை செய்வது போலவும் அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.