மீண்டும் தாயான சன்னி லியோன்.....இம்முறை இரட்டை குழந்தைகள்...!

Mar 6, 2018, 12:51 PM IST



வீரமா தேவி

ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன் தற்போது இந்திய திரையுலகில் காலடி எடுத்து வைத்து எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் வீரமா தேவி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இதற்காக பிரத்யேக பயிற்சிகளும் மேற்கொண்டு வருகிறார்.

சமூக அக்கறை

சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார்.சமூக அக்கறை கொண்ட சன்னி மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

வாடகை தாய்

இந்நிலையில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக சன்னியும் வெபரும் அறிவித்துள்ளனர்.குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.இந்த இரட்டை குழந்தைகளும் வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தைகளாகும்.

குறுகிய காலம்

இதுகுறித்து சன்னி லியோன் வெளியிட்டுள்ள பதிவில் குறுகிய காலத்தில் மூன்று குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆக போகிறோம் என்பதை நானும் டேனியலும் ஜூன் 21 ம் தேதிதான் தெரிந்து கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

போஸ்

அவரது கணவர் வெபர் வெளியிட்டுள்ள பதிவில் இது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.அத்துடன் தன் குழந்தைகளுடன் போஸ் கொடுக்கும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.