தாய் மொழிக்கு மரியாதை...! ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..!

Jul 19, 2018, 4:06 PM IST



நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர்கள் மீது பாலியல் குற்ற சாட்டுகளை முன் வைத்து. திரையுலகை சேர்ந்த பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளார். எனினும் இவருக்கு ஒரு டி.ராஜேந்தர் போன்ற நடிகர்கள் ஆதரவாக பேசி வருகிறார்கள். 

அதே போல் ரசிகர்கள் சிலரும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும். ஒரு சிலர் மட்டுமே இவரை தொடர்ந்து மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீரெட்டி தான் கூற வந்த கருத்தை, ஆங்கிலத்தில் கூறாமல் அவருடைய தாய் மொழியான தெலுங்கு மொழியில் கூறியிருந்தார். இதனால் இவர் என்ன கூறினார் என பலருக்கும் புரியவில்லை. இதனால் ரசிகர்கர்கள் சிலர் இவருக்கு எதிராக... ஏன் ஆங்கில மொழியில் கூறாமல், தெலுங்கில் கூறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பி இவரை விமர்சித்திருந்தனர்.   

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், ஸ்ரீரெட்டி ஒரு ட்விட் போட்டுள்ளார். இதில் 'ஆங்கிலத்திலேயே பேசுவதற்கு நான் இங்லீஷ்காரியில்லை. என்னுடைய தாய் மொழி எனக்கு நன்றாக பேச தெரியும் என கூறி, ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார். மேலும் ஆங்கிலம் என்பது ஒரு மொழி என்பதை அழுத்தமாக கூறியுள்ளார். 

ஆங்கிலம் நுனி நாக்கில் பேசினால் தான் மரியாதை என பார்க்கப்படும் நிலையில், இவர் தாய் மொழியை பெருமையாக கூறியுள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.