ஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...! நீங்களே பாருங்க பாஸ்...! 

Jul 20, 2018, 12:16 PM IST



ஸ்ரீரெட்டி தன்னை ஏமாற்றியதாக கூறி கடந்த சில தினங்களாக, தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் நடிகரின் பெயர்களை வெளியிட்டு, கோலிவுட் திரையுலகையே பரபரப்பாக்கினார். இவரின் செயல் அத்து மீறுவதாக நடிகர் கார்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார். மேலும் இவர் மீது புகார் கூறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

மேலும் ஸ்ரீரெட்டி அவரிடம் ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளார். அப்படி என்றால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கட்டும் என்று கூறியிருந்தார் கார்த்தி.

இந்நிலையில், இத்தனை நாள் நடிகர்கள் பற்றி தகவல்களை லீக்ஸ் செய்து வந்த ஸ்ரீரெட்டி, அவருடைய முகநூல் பக்கத்தில், இன்று லீக்ஸ் இல்லை என கூறி தமிழில் அவர் டப்மேட்ச் செய்த விடியோக்களை பதிவிட்டுள்ளார். 

இதில் '3' படத்தில் ஸ்ருதிஹாசன், தனுஷ்க்கு போன் நம்பர் கொடுக்கும் டயலாக் மற்றும் தனுஷ் அவரை ஃபாலோ செய்து வந்து லவ் பண்ணுறியா..? என கேட்கும் வசனத்தையும் ஒருவருடன் பேசி பதிவிட்டுள்ளார். 

இதை பார்த்த ரசிகர்கள் இவர் பேசியுள்ளது நன்றாக உள்ளது என்று இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.