Jul 14, 2018, 2:17 PM IST
கடந்த சில மாதங்களாக, தெலுங்கு பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டியின் பார்வை தற்போது தமிழ் திரையுலகின் பக்கம் திரும்பி உள்ளது.
முதலில் நடிகர் முருகதாஸ் பற்றி தகவல் வெளியிட்ட இவர், பின்பு ரோஜாக்கூட்டம் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து எழுதி இருந்தார்.
நேற்றைய தினம் இவருடைய சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். மேலும் அடுத்ததாக இவர் யாருடைய பெயரை இவர் வெளியிடுவார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஷால் பற்றி கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், 'விஷால் தன்னை மிரட்டுவதாக உணர்வதாக கூறியுள்ளார்' இருப்பினும் கோலிவுட் திரையுலகின் இருட்டு பக்கங்களை வெளியிடாமல் விடமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மீது குற்றம் சாட்டிய போதே... அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால், தற்போது ஆதாரங்கள் இல்லாமல் கோலிவுட் பிரபலங்கள் மீது இவர் குற்றம்சாட்டி வருவதை தடுக்கும் விதத்தில் சில செயல்களில் இறங்கி உள்ளதை சுட்டிக்காட்டும் விதமாக ஸ்ரீரெட்டி இப்படி ஒரு பதிவை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.