Jul 13, 2018, 1:15 PM IST
சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி லைவ் வீடியோ...! அதிரும் சினித்துரை..!
சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி தற்போது பேஸ்புக் லைவ் வந்துள்ளார்...
தெலுங்கு திரைப்பட நடிகையான ஸ்ரீ ரெட்டி ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததை விட, படுக்கையை பகிர அழைக்கிறார்கள் என ஒவ்வொருவரின் முகத்தை ஆதாரத்தோடு நிரூபித்து வரும் வகையில் தற்போது அனைவராலும் அறியப்பட்டவர் என்பது தான் உண்மை..
நேற்று நடிகர் ஸ்ரீகாந்த், நேற்று முன்தினம் இயக்குனர் முருகதாஸ், இன்று நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் என தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பட்டியல் நீளும் நிலையில் உள்ளது அவருடைய ஒவ்வொரு பதிவும்..
இந்நிலையில் நடிகர் ஸ்ரீ ரெட்டி, தனதுபேஸ்புக் பக்கத்தில் லைவ் வந்து உள்ளார்....
அதற்கான தலைப்பாக "நான் அழகாக இல்லையா ..? ஒரு சிலர் என்னை அழகு இல்லை என சொல்கிறார்கள்..இதனால் எனக்கு மிகவும் மன அழுத்தம் உள்ளது என தெரிவித்து உள்ளார்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சுமார் 2 நிமிடத்திற்கு மேலாக பேஸ்புக் லைவில் வந்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
ஆனால் அவர் பேசுவது சரியான ஒலியுடன் இல்லை. அவருடைய லைவ் வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு ஆதரவும் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.