சிக்ஸ் பேக்கில் மிரட்டும் சூரி !! கருப்பு கருப்புதான் !!

நாளை ரிலீசாக உள்ள சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் வைத்து சூரி மிரட்டியுளளார்.  வெள்ளையா இருக்கிறவங்களுக்குத்தான் சிக்ஸ் பேக் நல்லாயிருக்கும் என்ற வரைமுறையை உடைந்தெறிந்துள்ள சூரியின் இந்த கெட் அப் அனைவரையும் கவர்ந்து வருகிறது.


வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் சூரி. சின்ன சின்ன வேடங்களில் நடத்து வந்த சூரி தற்போது மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார்.

Latest Videos

மதுரையை அடுத்த ராஜாக்கூர் என்ற சிறிய ஊரில் விவசாய குடும்பத்தில் பிறந்த சூரி படிப்படியாக முன்னேறி தற்போது சினிமாவில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தான் நாளை வெளியாகும் சீமராஜா படத்தில் சூரி ஒரு வித்தியாசமான கெட்அப்பில் தோன்றியிருக்கிறார். பொதுவாக வெள்ளையாக இருப்பவர்களுக்குத்தான் சிக்ஸ் பேக் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். அதுவும் கதாநாயகன் மட்டுமே சிக்ஸ் பேக் வைத்திருப்பார்.

ஆனால் ஒரு கிராமத்தில் பிறந்து தனது நடிப்பாற்றலால்  திரையுலகை சூரி கலக்கி வருகிறார். தற்போது வெள்ளையா இருக்கிறவங்களுக்குத்தான் சிக்ஸ் பேக் நல்லாயிருக்கும் என்ற வரைமுறையை உடைந்தெறிந்துள்ள சூரியின் சீமராஜாவில் நடித்துள்ள இந்த  சிக்ஸ் பேக் இந்த கெட் அப் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

click me!