பிக் பாஸ்(Big Boss) அல்ல.பிக் காஸ்ட்(Big Caste) சேரி என்றால் அவ்வளவு இலக்காரமா? வறுத்தெடுக்கும் வலைதளவாசிகள்...

Jul 12, 2017, 10:46 AM IST



விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் ஏற்கனவே 'எச்ச' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கினார் தற்போது  "சேரி பிஹேவியர்"  என்று சொல்லி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது இந்த வன்ம பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. 

காயத்ரி ரகுராமின் இந்த இழிவான பேச்சை  ஒளிபரப்புவதை விஜய் டிவி இறுதியிருக்கலாம், பகுத்தறிவு பேசும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் இதை கண்டித்திருக்கலாம். தமிழ்ப்படைப்பாளி என சொல்லிக்கொள்ளும் சினேகன் அவ்வார்த்தைகளைக் கேட்டு ஏன் ஏதும் சொல்லவில்லை? இப்படி பல்வேறு கருத்துக்கள் வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அப்படி வைரலாகிவரும் சில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்... 

 

பிக்பாஸ் கூட்டத்துலயே நாகரிகமான 
நடவடிக்கை கொண்ட, மனிதத்தன்மையுடன் 
இருக்கும் ஒரே பெண் ஓவியா மட்டும் தான்.... 
அந்த உயர்வான நடவடிக்கைத்தான் "சேரி பிகேவியர்" என்றால்,
.

உலகமே காறித்துப்பும் இழிவான நடவடிக்கை
கொண்ட அநாகரிக பெண் காயத்ரி ரகுராமின்
நடவடிக்கை கண்டிக்கத்தக்க அருவெறுக்கத்தக்க
கேவலமான மனிதத்தன்மை அற்ற
மிருகத்தனமான "அக்ரஹார பிஹேவியர்"....

 

// வீட்டுக்காரன் செத்தால் தன் வீட்டில் சோறு பொங்காமல் இருப்பது சேரி பிகேவியர்..

எவன் செத்தால் எனக்கென்ன என்று கதவை மூடிக்கொண்டு தின்னுவது அக்ரஹார பிகேவியர்..

 உடுத்தினாலும் கயமைத்தனம் பண்ணாமலிருப்பது சேரி பிகேவியர்..

கலர்கலரா டிரஸ் மாத்தினாலும் காவாளித்தனத்தில் நம்பர் ஒன் தான் அக்ரஹார பிகேவியர்..

 வழியில்லைன்னாலும்,காட்டிக் கொடுக்காத தன்மை தான் சேரி பிகேவியர்..

காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் ஏச்சுப் பிழைப்பதும் தான் அக்ரஹார பிகேவியர்..

 சோத்துக்கும் உழைத்து வாழ எண்ணுவது சேரி பிகேவியர்..

உழைக்காமலே கடவுள் பெயரால் ஊரை ஏமாற்றுவது அக்ரஹார பிகேவியர்..

@காயத்ரி ரகுராமய்யர்..

-ப.சி //

"சேரி பிகேவியர்" : ஏன் அவர்கள் பொங்கவில்லை?

"பார்ப்பனர்" எனும் சொல் தங்களை இழிவுபடுத்தும் சொல்லாகிப் போனது என்று 
பிராமணர்கள் கருதுவதால் நான் அதைப் பயன்படுத்துவதில்லை. ஒரு டிவி விவா
தத்தில் மதிமாறனால் அது பயன்படுத்தப்பட்ட போது பாஜகவின் நாராயணனும் 
எஸ் வி சேகரும் கொந்தளித்துப் போனார்கள். முன்னவர் அவரை மிரட்டினார்; பின்
னவர் ஸ்டாலினிடம் புகார் செய்தார். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி 
ரகுராம் "சேரி பிகேவியர்" என்று பட்டியல்சாதி மக்களை இழிவுபடுத்தும் சொற்களை 
பயன்படுத்தியிருக்கிறார். இது அக்கிரமமானது. பலரும் இதை கண்டித்திருக்கிறார்
கள். "இந்துக்களுக்கான கட்சி" எனப்படும் பாஜகவின் வீராதிவீரர்கள் இதற்கு 
ஏன் அப்படி பொங்கவில்லை? அவர்கள் இந்துக்கள் இல்லையோ?

"சேரி பிகேவியர்" :

ஓவியா ஒரு சேரி பிகேவியர் - அக்ரஹாரம் காயத்ரி

சேரி என்றால் அவ்வளவு இலக்காரமா??

சேரி மக்கள் கிட்ட உண்மை இருக்கும், உழைப்பு இருக்கும், அவர்களிடம் பேசினாலே அவர்கள் அதிகம் சொல்ல கூடியது “மழையிலும், வெயிலிலும் லோல்பட்டு, லொங்கழிஞ்சு குழந்தையை படிக்கவைக்கிறேன்ப்பா என்பதே. அவர்கள் அனைத்தும் உழைத்தே உன்ன நினைக்கும் உயர்ந்த குணம் மிக்கவர்கள். ஆனால் காயத்ரி சேரிமக்கள் ஏதோ கேவலமான மக்கள் போன்று சித்தரித்து பேசுவது கண்டிக்ககூடியது.

மேலும் நாம் எல்லோரும் தமிழ் சமூகம் தானே பரணி சொன்னது உண்மையான வார்த்தை.

பரணி அனைவராலும் ஒதுக்கப்பட்டு மனநோயாளிய போல நடந்து கொண்டான், மேலும் பரணியால் பொம்பளைங்களுக்கு பாதுகாப்பில்லை என சொல்வது அபான்டம்..

அக்ரஹாரம் பிகேவியர் என்பது பரணி விஷயத்தில் காயத்ரி செய்தது.

இந்த பிகேவியர் யாரிடமும் இருக்கக்கூடாது. பொதுவாகவே மக்கள் "சேரி பிகேவியர்ர" விரும்புகிறார்கள், அதனால்தான் ஓவியாவுக்கு ஒட்டு அதிகமானது.

பிக் பாஸ்(Big Boss) அல்ல.பிக் காஸ்ட்(Big Caste).
பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவு படுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் குற்றமாகும்.

காயத்திரி என்பவர் சேரி பிஹேவியர் என்று இழிவு படுத்தி இருப்பதாக அறியவருகிறேன்.அந்த லிங்க் இருந்தால் அனுப்பவும். உயர் நீதி மன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும்./

எவிடென்ஸ் கதிர்

சேரி பிகேவியர் - நடிகை காயத்ரி ரகுராம்

அடக்கி ஒடுக்கப்பட்டு அறிவு மறுக்கபட்டு அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையிலும் எல்லை தாண்டாமல் வரம்பை மீறிவிடாமல் இருப்பது சேரி மக்கள்தான் என்பது இந்த குத்தாட்ட நடிகைக்கு தெரியுமா ? இப்படி ஒரு சகிப்புத்தன்மையை சேரி மக்கள் கொண்டுள்ளதால்தான் இவளை போன்ற அரைகுறைகள் எல்லாம் பெருமைமிக்க மக்களின் பிகேவியரை பற்றி பேசுகிறது ...

பிக்பாஸ் என்கிற பெயரில் விஜய் தொலைக்காட்சி நடத்தும் அரைக்கிறுக்கு கூத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற போக்கை அதில் பங்கேற்ப்பவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பிக்பாஸ் மக்களால் கிக் பாஸாகிவிடும் என எச்சரிக்கிறோம் ...

இன்னும் விமர்சனங்களை அடுக்கிக்கொண்டே பொகலாம்... அவ்வளவு கருத்துக்கள் காயத்திரிக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.