முழுமூச்சில் உடற்பயிற்சி செய்யும் சிம்பு......கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி....

Feb 1, 2018, 12:51 PM IST





சிம்பு, ஓவியா திருமண சர்ச்சை


நடிகர் சிம்பு AAA படத்திற்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. இவர் அமைதியாக இருந்தாலும் இவர் பின்னாடியே துரத்தும் சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பிக்பாஸ் ஓவியாவுக்கும், இவருக்கும் திருமணம் என்று வதந்தி சில நாட்களுக்கு முன் கிளம்பியது. அதன் பின் சிம்புவும் ,ஓவியாவும் இணைந்து ஆங்கில புத்தாண்டு சிறப்பு பாடலாக மரண மட்டை குத்து பாடலை பாடினர். அது இணையத்தில் வைரலானது.

குற்றச்சாட்டு

மேலும் சில நாட்களுக்கு முன்பு ஜீவாவின் 'கீ' படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் வல்லவன் படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன், சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷாலிடம் ஏன் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அதிக உடல் எடை

இது ஒருபுறமிருக்க AAA படத்திற்காக சிம்பு ஏற்றிய உடல் எடையை அவரால் குறைக்க முடியவில்லை. மேலும் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களே உடல் எடையை குறையுங்கள் இந்த மாதிரி படங்களில் நடிக்காதீர்கள் என்று விமர்சிக்கவும் செய்தனர்.


பதிலடி

இந்நிலையில், தன்னை வெறுத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிம்பு ஜிம்மில் முழு மூச்சில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததால் உடல் எடையும் சிறிது குறைத்திருக்கிறார். மேலும் சிம்பு தற்போது மணிரத்னம் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி அரவிந்த்சாமி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். என்னுடைய ஸ்டார் திரும்ப வந்துவிட்டார்... நீங்க இல்லாம நாங்க இல்லை என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகிறார்கள்.

சிம்புவின் அந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோ இதோ..