Nov 3, 2017, 4:48 PM IST
பழம் பெரும் பாடகி பி. சுசிலா உடல் நலக்குறைவால் மரணப் படுக்கையில் உள்ளார் என்று ஒரு தகவல் வெளியானது.
இந்த தகவல் எப்படியோ அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்ற பி.சுசீலாவிற்கு தெரிய வர உடனே... ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில் நான் நன்றாக உள்ளேன், எனக்கு எதுவும் இல்லை. தற்போது நான் அமெரிக்காவில் உள்ளேன். இரு நாட்களில் சென்னைக்கு திரும்பி வந்துவிடுவேன் பிறகு எந்த தொலைக்காட்சிக்கு வேண்டுமானாலும் பேட்டி கொடுக்கிறேன். தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
இதே போல் பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பியும் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சுசிலா அம்மா தனக்கு போன் செய்து யார் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது என வருத்தப்பட்டார். இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார் அது குறித்த ஒரு வீடியோ கட்சி இதோ...