Sep 21, 2018, 1:50 PM IST
இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சாமி'. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற தோடு, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'சாமி square ' என்ற பெயரில் 15 வருடங்களுக்கு பிறகு படமாக்க திட்டமிட்டார் இயக்குனர் ஹரி. இந்த படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்தார்.
இதில் கதாநாயகியாக, நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகியுள்ளது.
சாமி படத்துடன் சாமி 2 படத்தை ஒப்பிட்டால், கலவையான விமர்சனங்கள் மட்டுமே வருகிறது. இந்நிலையில் இந்த படம் எப்படி இருக்கிறது என ஆர்.ஜே.விக்னேஷ் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்தார்.