சிறப்பாக நடந்து முடிந்த சமந்தா-நாகசைதன்யா திருமணம் (வீடியோ)

Oct 7, 2017, 4:39 PM IST



பல  நாட்களாக ரசிகர்களால் நட்சத்திர காதல் ஜோடிகள் என்று அழைக்கப்பட்டு வந்த முன்னணி நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் நேற்று கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நண்பர்களாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் காதலர்களாக இருந்து வந்த இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடைய திருமணத்தில் இருவருக்கும்  நெருக்கமான, சொந்தங்கள்  மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பிறப்பால் சமந்தா கிருஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்றாலும் திருமணம் இந்து முறைப்படியே நடைபெற்றது .

மேலும் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் நடைபெற உள்ளதாகவும் இதில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.