திருமண பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட சமந்தா...(வீடியோ)

Oct 8, 2017, 12:29 PM IST



தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் பல்லாவரம் பொண்ணு சமந்தாவிற்கும், நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் நேற்று கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்தத் திருமணத்திற்கு முதல் நாள் இரவு, சமந்தா மற்றும் நாகசைதன்யா நண்பர்களுடன் கொண்டாட மிகவும் பிரமாண்டமான அளவில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அருமையாக நடனமாடினர். அப்போது சமந்தாவும் அவர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டார். அந்த காட்சிகள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.