Nov 25, 2017, 5:08 PM IST
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஓர் இரு படங்களில் நடித்துள்ள நடிகை சாயிஷா சாய்களுக்கு தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் கொடுத்தார். இந்தப் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தற்போது விஷால், கார்த்தி நடித்து வரும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ஜிங்கா ஆகிய படங்களில் நடித்து வருவதோடு... பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ராப் பாடலுக்கு நடனத்தை வெளியிட்டுள்ளார். இவருடைய நடன அசைவுகளை பார்த்து கோலிவுட் நடிகைகள் பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காரணம் டான்ஸ் என்ற பெயரில் கால் கைகளை அசைத்து விட்டு செல்லும் நடிகைகள் மத்தியில் இப்படி ஒரு நடனமா..
.நீங்களே பாருங்க...