நாளைய முதலமைச்சர் ரஜினிகாந்த்... விரைவில் அவதாரம் எடுப்பார்...! ரசிகர்கள் ஆரவாரம் (வீடியோ தொகுப்பு)

Dec 12, 2017, 7:11 PM IST



கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 68 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு எப்போதும் போல் காலை முதல் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, போயஸ் தோட்டத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் குவிந்தனர்.

மேலும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி இவருடைய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பு வரும் என்று காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான் மிஞ்சியது என கூறலாம். எனினும் பல ரசிகர்கள் ரஜினிக்கு வாழ்த்து கூறியபோது... அடுத்த முதலமைச்சர் ரஜினிகாந்த் எனக் கூறி அவருடைய அரசியல் வருகையை எதிர்நோக்குவது போல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த ஒரு வீடியோ தொகுப்பு: