நீங்கள் அளித்த இந்த வெற்றி வாழ்நாள் முழுவதும் எங்களது இதயத்தில் நிலைத்திருக்கும்; SS ராஜமௌலி உருக்கம்...

Apr 30, 2017, 4:14 PM IST



பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், ராமயா கிருஷ்ணன் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

இப்படம் வெளியான முதல் நாள் கலெக்ஷன் சுமார் 126 கோடி ரூபாயை அள்ளியது. இப்படத்தின் வெற்றிக்கும் எதிர்பார்ப்புக்கு முழுக்கரணமே முதல் பாகத்தில் ஏற்பட்ட பாதிப்பும் அடுத்த பார்ட்டில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் சாதாரண ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது என சொல்லலாம். ஏனென்றால் இப்படத்தில் கொட்டிக்கிடக்கும் பிரமாண்டமும், இதுவரை பார்க்காத எழில்மிகு இயற்கை காட்சிகளும் ஒரு பெரிய பலம் தான்.

பாகுபலி வெளியாவதற்கு ஒருவாரத்திற்கு முன்னாள் சத்யராஜிக்கு எதிராக கர்நாடகாவில் தொடங்கிய போராட்டம் இயக்குனர் மற்றும் சகா நடிகர்களை எரிச்சலை உண்டாக்கியது. இப்படத்தின் நடித்த அனைவரும் சுமார் 5 ஆண்டுகளாக உழைத்திருக்கிறார்கள் என்பது பாகுபலியை பார்த்தாலே தெரியும். அப்படியொரு பெருமையான படைப்பை கொடுத்த ராஜமௌலிக்கு இந்த வெற்றி ரொம்பவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனை வெளிப்படுத்தும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில்.

பாகுபலி போன்ற ஒரு பெரிய படைப்பு வெளியாவதில் ஏற்படும் சிக்கல்கள் வழக்கமானதுதான். ஆனால் அந்த தடங்கல்களை எல்லாம் எளிதில் கடக்க உதவியது பாகுபலி ரசிகர்களின் பேரன்பும் உத்வேகமும்தான் என்பதை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த 5 ஆண்டுகளும் எங்களோடு உறுதுணையாக இருந்து எங்களது ஒவ்வொரு முயற்சிகளையும் தொடர்ந்து ஊக்கப்படுத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி. நீங்கள் அளித்த இந்த மாபெரும் வெற்றியை எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களது இதயத்தில் நிலைத்திருக்கும்.