மூஞ்சில ஆசிட் ஊத்திடுவேன்! பிரபல முன்னணி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்!

By Maruthu Pandi Santhosam  |  First Published Sep 8, 2018, 12:03 PM IST

ஆரா சினிமாஸ் என்ற பேரில் சில படங்களை  செய்தவர் மகேஷ். திருவண்ணாமலை மாவட்டத்தை சேந்த மகேஷின் தந்தை பிரபல காட்சியைச் சேர்ந்தவர். 


ஆரா சினிமாஸ் என்ற பேரில் சில படங்களை  செய்தவர் மகேஷ். திருவண்ணாமலை மாவட்டத்தை சேந்த மகேஷின் தந்தை பிரபல காட்சியைச் சேர்ந்தவர். 

பெரிய பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களே திட்டாடிக்கொண்டிருக்கும் போது, மகேஷின் வளர்ச்சியின் பல ரகசியங்கள்,  இருப்பதாகச் சொல்கிறார்கள் சினிமா புள்ளிகள். இந்த மகேஷ், முரளி மகன் அதர்வா - ஹன்ஷிகா ஜோடியை வைத்து முதல் தயாரிப்பாக '100 ' என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இதில் ஹன்சிகாவுக்கு சம்பளமாக 75 லட்சம் பேசி 35 லட்சம் முன் பணமாக கொடுத்திருக்கிறார். மீதி பணத்தை படம் முடித்த பிறகு கொடுப்பதாக கூறி இருந்தார். பாதி படத்தை நடித்து முடித்த பிறகு ஹன்சிகா மீதி சம்பளத்தை கேட்டுள்ளார்.

அப்போது 40 லட்சத்திற்கு 5 செக்குகள் கொடுத்துள்ளார் ரமேஷ். மூன்று நாட்கள் ஷூட்டிங் பெண்டிங் இருந்த நிலையில் மகேஷ் கொடுத்த செக் ஹன்சிகா பேங்கில் போட்டதும், அது பவுன்சாகி விட்டது. அமவுண்ட் கிளியர் ஆனால் தான் ஷூட்டிங் வருவேன் என கூறியுள்ளார் ஹன்சிகா.

நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துவிட்டார். இதனால் டென்ஷானான மகேஷ், 'நான் நினைத்தால் தமிழ் சினிமாவிலேயே நீ நடிக்க முடியாது, மூஞ்சில ஆச்சி அடித்து விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்றும் ஹன்சிகாவை போனில் மிரட்டியுள்ளாராம். தற்போது இந்த தகவல் தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

click me!