''இந்திய சினிமா வரலாற்றை புரட்டிப்போட்ட பாகுபலி 2'' - ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபாஸ்...

May 7, 2017, 1:16 PM IST



''நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை உங்களின் அன்பு எனும் அடை மழையால் நினைய வைத்ததற்கு எந்நாளும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்'' என பாகுபலி நாயகன் பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இருந்தும் என்னை உங்களின் அளவற்ற அன்பினால் திக்குமுக்காட செய்ததற்கு நன்றி கடனாக என்னுடைய முழுத் திறமையையும் வெளிபடுத்தி உங்களை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளேன். அதில் வெற்றியும் கண்டுள்ளதாக அனைவரும் கூறுகின்றனர்.

என்னுடைய 'பாகுபலி' பயணத்தில் நான் கைப்பற்றிய அம்சங்களில் முக்கியமானவர்கள் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.

பாகுபலி போன்ற பிரம்மாண்ட படைப்பில் என்னைக் கதாநாயகனாக்கி வாழ்நாள் முழுவதும் நொடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பை அளித்த இயக்குனர் ராஜமௌலி அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.

இந்த தருணத்தில் பாகுபலி படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.