பேட்ட படத்த ரஜினி ரசிகன் இயக்கி இருக்கான்னா... விஸ்வாசம் படத்த அஜித் வெறியன் இயக்கி இருக்கான்பா!! இந்த வீடியோவை பாருங்க

Dec 31, 2018, 11:24 AM IST

பேட்ட டிரைலரில் ரஜினி பேசும் வசனங்களான ‘அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்ருவேன்.. மானம் போச்சுன்னா… திரும்ப வராது.. பாத்துக்கோ’ மற்றும் ‘ எவனுக்காவது பொண்டாட்டி புள்ள செண்ட்டிமெண்ட் இருந்தா… ஓடிப்போயிடு.. கொல காண்டுல இருக்கேன்… கொல்லாம விடமாட்டேன்’ எனும் வசனங்கள் விஸ்வாசம் படத்தையும் அஜித்தையும் தாக்குவதாக  சொல்லப்பட்ட நிலையில், நேற்று வெளியான விஸ்வாசம் டிரெய்லரில் அஜித் பேசியுள்ள சில வசனங்கள் ரஜினிக்குப் பதில் சொல்வது போலவும் கேலி செய்வது போலவும் அமைந்துள்ளன.

அஜித்  பேசும் ‘ உங்க மேல கொல கோவம் வரணும்… ஆனா உங்கள எனக்குப் புடிச்சுருக்கு… பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம்… ஊரு கொடுவிலார்பட்டி, பொண்டாட்டி  பேரு நிர்ஞ்சனா… பொண்ணு பேரு ஸ்வேதா…ஒத்தைக்கு ஒத்த வாடா’ ஆகிய வசனங்கள் பேட்ட டிரைலரில் ரஜினி பேசிய வசனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாஸாக அமைந்துள்ளது.