Oct 16, 2017, 5:29 PM IST
மெர்சல் திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை ஒவ்வொரு நாளும் மாஸாக வரவேற்று வருகின்றனர். பல திரையரங்குகளில், மிக பிரமாண்டமான போஸ்டர்கள் வைத்து பிரமிக்க வைத்துள்ளனர்.
இன்னும் சிலர் மெர்சல் படத்திற்கு தெருக்களில் இறங்கி நடனமாடியும், குழந்தைகளை நடனமாட வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படி ரசிகர்கள் அனைவரும் ஆரவாரத்தோடு மெர்சல் படத்தை வரவேற்றாலும், அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்காமல் மூன்று நான்கு மடங்கு அதிகமாக டிக்கெட் கட்டணம் பல திரையரங்குகளில் வசூலிப்பதால், ரசிகர்கள் கொஞ்சம் டென்ஷனாகியுள்ளனர்.