Sep 27, 2017, 6:30 PM IST
விக்ரம் வேதா படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் கருப்பன். இந்தப் படம் சரஸ்வதி பூஜை சிறப்புப் படமாக நாளை மறுநாள் வெளிவர உள்ளது.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, இந்தத் திரைப்படம் கணவன் மனைவியின் அன்பைப் பற்றிக் கூறும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், கண்டிப்பாக மக்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய படத்தின் நாயகி தான்யா, இந்தப் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி எனக் கூறி தன் உரையை மிகவும் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
கருப்பன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ: