Oct 16, 2017, 7:10 PM IST
உடல் நலக் குறைவு காரணமாக எங்கும் வெளியே செல்லாமல் ஓய்வில் இருந்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் தமிழரசு, தன்னுடைய பேரக் குழந்தையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு வந்தார். அப்போது தன் கொள்ளுப் பேரனைப் பார்த்து கருணாநிதி சந்தோஷப்படும் காட்சிகளும், அவருடன் கொள்ளுப்பேரன் விளையாடும் காட்சிகளும் அடங்கிய காணொளிப் பதிவு தற்போது வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
அந்தக் காட்சிகள் இதோ...