ஆன்மீக பேச்சாளார் கலைமாமணி தேச மங்கையர்கரசியின் மகளிர் தின வாழ்த்து (வீடியோ)

Mar 8, 2018, 5:17 PM IST



தந்தையின் ஊக்குவிப்பால் பல மேடைகளில் இலக்கியச் சொற்பொழிவாற்றத் தொடங்கிய கலைமாமணி தேச மங்கையர்கரசி. திருக்குறள், தேவாரம், திருவாசகம் மற்றும் பிற தமிழ்ப் பாயிரங்களில் புலமை பெற்றவர். கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுக் கொண்ட இவர் பரதநாட்டியக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்.

இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, மொரீசியசு போன்ற நாடுகளில் இலக்கிய உரைகள் ஆற்றியுள்ள இவரின் தெய்வீக உரையை கேட்கத் துவங்கினால் பசியும் மறக்கும் என பலர் தங்களுடைய கருத்தை கூறுவர். 

இந்நிலையில் இவர் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோ தொகுப்பு இதோ: