இணையத்தில் வெளியான காலா சண்டைகாட்சி... படக்குழு அதிர்ச்சி!

Feb 13, 2018, 10:14 AM IST



ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் அதிரடியான கிளைமாக்ஸ் சண்டைகாட்சி இணையத்தில் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தை அடுத்து காலா படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும்  ஏப்ரல் 27ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இந்த சர்ப்ரைஸ் அடங்குவதற்குள் இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியின் வீடியோவை வெளியிட்டு சிலர் படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளனர்.

எப்போதுமே திரையரங்கில் ஒளிபரப்பாகும்போது அதை முறைகேடாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிடுவது மட்டுமல்லாமல் தற்போது படப்பிடிப்பின்போதே காட்சிகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்புவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகிப் படக் குழுவுக்கு அதிர்ச்சியளித்த நிலையில் தற்போது படத்தின் சண்டைக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் இரும்புக் கம்பியுடன் தாக்க வரும் வில்லனை ரஜினிகாந்த் அடிக்கும் சண்டைக்காட்சி வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.