Nov 24, 2017, 6:24 PM IST
தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் கொடுத்த நடிகை ராய் லக்ஷ்மி, கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகிகளின் இடத்தைப் பிடிக்க தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்.
இவர் நடித்து கடைசியாக தமிழில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் 'காஞ்சனா 2 '. பின் இவர் நடிகர் ஸ்ரீகாந்துடன் நடித்து வெளிவந்த சௌகார்பேட்டை திரைப்படம் இவர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ராய்லட்சுமி படு கவர்ச்சியாக நடித்துள்ள 'ஜூலி 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு சென்சார் குழுவினர் 'A' சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால் சமீபத்தில் ஏசியா நெட் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த ராய் லட்சுமி கூறுகையில், இது அனைவரும் பார்க்கவேண்டிய படம் என்றும் , ஆனால் 'A' சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும் ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.
ராய் லட்சுமியின் பிரத்யேகப் பேட்டி...