Feb 4, 2019, 12:50 PM IST
ஏ.ஆர்.ரகுமான் இசைப்பதை பக்கத்தில் நின்று ரசித்து கைதட்டி பாராட்டிய இளையராஜா! மெய் சிலிர்க்கும் வீடியோ
இசைஞானி இளையராஜாவின் 75 வருடத்தை சிறப்பிக்கும் விதமாக, அவருக்கு தமிழ் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 'இளையராஜா 75 ' என்று மிகப்பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டு மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பல்லாயிர கணக்கான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு ரசித்த்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் புன்னகை மன்னன் தீம் மியூசிக் ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் வாசிக்க அதனை அவருடைய பக்கத்தில் இருந்து ரசித்த இளையராஜா பின் கைதட்டி மனதார அவரை பாராட்டினார்.