நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட ஹன்சிகா...!

Oct 12, 2017, 6:13 PM IST



நடிகை ஹன்சிகா நேற்று சேலத்தில் பிரபல தனியார் நகைக் கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டார்.. 

எந்த ஒரு அனுமதியும் வாங்காமல் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியால் சேலத்தின் புறவழிச் சாலையில், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் வேலைக்குச் செல்பவர்களும், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் சிரமத்துக்கு உள்ளாகினர்..

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் ஏற்பட்ட இந்தப் போக்குவரத்து பாதிப்பையும் பொருட்படுத்தாமல் ஹன்சிகா, ரசிகர்களுடன் செலஃபி  எடுத்துக்கொண்டார். மேலும், நடு ரோட்டில் டார்லிங் டம்பக்கு என்கிற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.