கவர்ச்சி நடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு..! வீட்டுக்குள் புகுந்து 8 பேர் வெறிச்செயல்!

By manimegalai a  |  First Published May 29, 2020, 12:02 PM IST

தமிழில் பல திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து பிரபலமான, நடிகையின் மகனை வீட்டிற்குள் புகுந்து 8 பேர் கத்தியால் குத்தி தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


தமிழில் பல திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து பிரபலமான, நடிகையின் மகனை வீட்டிற்குள் புகுந்து 8 பேர் கத்தியால் குத்தி தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மாயா தமிழில் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். இவர், அசத்தல், வட்டாரம், என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் நடித்துள்ள கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அத்தையும் ஆவார். தன்னுடைய குடும்பத்துடன் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் விக்கியை நேற்று இரவு திடீர் என சில மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக கத்தியால் தாக்கியதில் விக்கி பலத்த காயமடைந்தார். 

Tap to resize

Latest Videos

அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயன்ற போது, அந்த 8 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் விக்கிக்கு முதுகு, வயிறு, மார்பு, உட்பட 10 இடங்களில் பலத்த, மற்றும் லேசான கத்தி குத்து காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில், வலியால் துடித்துக்கொண்டிருந்த விக்கியை  உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது ’விக்கிக்கு போதை பழக்கம் இருப்பதாகவும் இதனால் அவர் போதையில் அடிக்கடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தகாரரில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இவரை தாக்கிய எட்டுபேரும் விக்கி தகரால் ஈடுபட்ட ஒருவரின் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.  இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சமீபத்தில் விக்கி குடிபோதையில் அவரது தெருவில் தகராறில் ஈடுபட்டார் என்று  தட்டிக்கேட்ட காவல் துறை அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இது குறித்து வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

click me!