“அந்த நடிகைக்கு நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தேனா” பிஸ்மியின் புகாருக்கு இயக்குனர் சீனுராமசாமி பதில்...

By Ramya s  |  First Published Nov 23, 2023, 12:51 PM IST

இளம் நடிகை மணிஷா யாதவ் சினிமாவிஅ விட்டு போனதற்கு இயக்குனர் சீனு ராமசாமி தான் காரணம் எண்று பிஸ்மி கூறியதற்கு சீனு ராமசாமி பதிலளித்துள்ளார்.


சினிமாவை பொறுத்தவரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது தொடர்பான சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிஸ்மி, சினிமாவில் பல நடிகர்களும், இயக்குனர்களும் கதாநாயகிகளை மோசமாகவே பார்க்கின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் அட்ஜெஸ்ட்மெண்ட் காரணமாக பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகியதாகவும் கூறினார். அந்த வகையில் இளம் நடிகை மணிஷா யாதவ் சினிமாவிஅ விட்டு போனதற்கு இயக்குனர் சீனு ராமசாமி தான் காரணம் எண்றும் கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மணிஷாவை இடம் பொருள் ஏவல் படத்திற்காக சீனு ராமசாமி ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அந்த படத்தில் ஒரு வாரம் மட்டுமே மணிஷா நடித்ததாகவும் பிஸ்மி கூறினார். மேலும் அப்போது சீனு ராமசாமி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்  தான் அவர் சினிமாவை விட்டு விலகியதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்.. ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க.. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க.. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க... இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வணக்கம்,

இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்

ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க

10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க
திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க...

இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்.… pic.twitter.com/V7szOIJ945

— Seenu Ramasamy (@seenuramasamy)

மேலும் குப்பை கதை படத்தின் ஆடியோ விழாவில் நடிகை மணிஷா தனக்கு நன்றி தெரிவித்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது இந்த படத்தில் மணிஷா யாதவ் நடிக்கவிருந்த கதாப்பாத்திரத்தில் தற்போது நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விசித்ரா பாலியல் புகார்! நடிகர் சங்க தலைவராக இருந்தும் விஜயகாந்த் ஏன் ஆக்‌ஷன் எடுக்கல? கணவர் சொன்ன பகீர் தகவல்

click me!