தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகரும், இளைஞர்களின் ரோல்மாடலாகவும் இருப்பவர் தல அஜித், அதேபோல கிரிக்கெட்டில் பல லட்ச இளைஞர்களின் ரோல் மாடலாக இருப்பவர் தல தோனி இவர்களது பெயர்கள் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' லிஸ்டில் மிஸ்ஸாகியுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் 2019 ஆண்டுக்கான சர்வேயில் பாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் ஐந்து இடங்களில் அமிதாப்பச்சன், அமீர்கான், சல்மான்கான், அக்சய்குமார் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர்.
அதேபோல், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் தெலுங்கு, கன்னடம், மலையாள நட்சத்திரங்கள் யாருமே இடம்பெறவில்லை.
அதேபோல் அகில இந்திய அளவில் நம்பகத்தன்மையுள்ள நடிகைகள் லிஸ்டில் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, காத்ரினா கைப், மாதுரி தீக்சித், அலியா பட், கஜோல் ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். கடந்த ஆண்டுகளில் முதல் ஐந்து இடங்களில் இருந்த ஐஸ்வர்யாராய் 6வது இடத்திலும் சன்னிலியோன் 11வது இடத்திலும் உள்ளர். இந்த லிஸ்டில் பிரியங்கா சோப்ரா இடம்பெறவில்லையென்பது கூடுதல் சோகம்.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களில் விராத் கோஹ்லி, சச்சின் தெண்டுல்கர், ரோஹித் சர்மா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். இந்த லிஸ்டில் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் அதாவது சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் தல அஜித், கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தல தோனியும் இடம்பெறாதது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.