Nov 15, 2017, 7:45 PM IST
சென்னை ராயப்பேட்டையில் மின்சாரம் தொடர்பான பிரச்னை இருக்கிறது என்று ஊர் மக்கள் புகார் கொடுத்தனர். அதனை சரிசெய்ய மின்சார வாரியத்தில் இருந்து போர்மேன் வந்து என்ன பிரச்னை என்பதைப் பார்ப்பதற்காக, மின் தொடர்பை ஆப் செய்யாமலேயே மேலே ஏறியுள்ளார்.
இதனால் திடீர் என அவர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து, மயக்கமான நிலையில் மேலே தொங்கினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்த போர்மேனைக் காப்பாற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதிருஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய காட்சிகள் இதோ..