வயிறு தெரியும் உடையில்... வடிவேலு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி..! வைரலாகும் வீடியோ

By manimegalai a  |  First Published Feb 8, 2021, 4:27 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பும், சரியாக 4 மணி ஆகிவிட்டால் கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி செய்து வந்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கொஞ்சம் கவர்ச்சி அலைகளை ஓவராக அலைபாயவிடாமல் அடக்கி வாசித்து வருகிறார்.
 
Latest Videos

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே சென்ற முதல் வாரத்திலேயே, யாரிடமும் சரியாக பேசவில்லை என ஒதுக்கப்பட்டதால், ஒரு சில வாரங்களிலேயே அம்மணி வீட்டுக்கு மூட்டையை கட்டி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், சைலண்டாக விளையாடி... நாமினேஷனில் இருந்து தப்பித்து பைனல் செல்வதற்கு முந்தய வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார் ஷிவானி.

ஓவியா, லாஸ்லியா அளவிற்கு டான்ஸ் ஆடாவிட்டாலும் ஓரளவிற்கு டான்ஸ் ஆடும் இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வைகை புயல் வடிவேலு பாட்டுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். ஷிவானி தற்போது, ஆடியுள்ள இந்த டான்ஸுக்கு நெட்டிசன்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அம்மணி தற்போது வெள்ளி திரை படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

ஷிவானியின் அந்த செம்ம குத்தாட்டம் இதோ... 

click me!