Oct 14, 2017, 6:29 PM IST
பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்த நடிகர் தாடி பாலாஜி, ஏற்கனவே தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக நித்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து ண்டார்.
பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர்கள் சந்தோஷமான தம்பதிகளாக நமக்குத் தெரிந்தாலும், தற்போது பிரச்சனை வெடிக்கும் போதுதான் பாலாஜியைப் பற்றிய பல உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர், தாடி பாலாஜி தன்னுடைய குழந்தை முன் அசிங்கமாக நடந்து கொண்டது போல் ஒரு வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலாஜியின் மனைவி நித்தியா நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார். அதில் பாலாஜி தன்னை தீ வைத்துக் கொளுத்தவும், மாடியில் இருந்து எட்டி உதைத்தும் என இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்தார் எனக் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருடன் வாழ தனக்கு பயமாக உள்ளது என்றும், இனி அவருடன் என்னால் வாழ முடியாது எனவும் பத்திரிகையாளர்கள் முன் கதறியவாறு கூறியுள்ளார்... அவர் பேசிய காட்சிகள் இதோ...