சந்தானத்தை கலாய்த்துப் பேசிய ஆர்யா... (வீடியோ)

Oct 19, 2017, 5:41 PM IST



அண்மையில் நடிகர் சந்தானம் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள  ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் விவேக், ஆர்யா, இயக்குனர் ராஜேஷ், ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் மற்றும் பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்க, VTV  கணேஷ் தயாரிக்கிறார், முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் சிம்பு.

இந்தப் படவிழாவில் பேசிய நடிகர் ஆர்யா... சந்தானத்தைப் பார்த்து இவர் ஆக்சன் காட்சிகளில் படத்தில் எப்படி நடிப்பார் என நினைத்துக்கொண்டிருந்தேன்... ஆனால் உண்மையில் ஒருவரிடம் ஆக்சன் காட்டியுள்ளார் என பிஜேபி பிரமுகரை அடித்ததை சுட்டிக்காட்டிப் பேசினார்.

அந்த விழாவில்  பேசிய பிரபலங்களின் வீடியோ தொகுப்பு இதோ...