
வைரமுத்து மீது மீடு புகார் அளித்ததில் இருந்து பல்வேறு விஷயங்களுக்கும் பொங்கி எழும் பாடகி சின்மயி நித்தியானந்த விஷயத்தில் ஒரு ட்விட் கூட போடாததற்கு எதிராக நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், ‘’மேடம் நீங்கள் இஷ்டத்திற்கு ட்விட் போடுவீங்க. ஆனால் நித்தியானந்தா விஷயத்துக்கு ட்விட் போட மாட்டீர்களா? என சின்மயி அக்கவுண்டை டேக் செய்து இருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள சின்மயி, ’’இந்த ட்விட்டை காப்பி பேஸ்ட் பண்ணவங்களோட பெத்தவங்க பசங்கள வளர்க்கிறதுக்கு பதில் பொறுக்கிகளை வளர்த்திருக்கிறார்கள் என நிரூபித்ததற்கு நன்றி’’எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர், ‘’எது எதுக்கோ பொங்க நேரம் இருக்கிற உங்களுக்கு, அத்தனை இளம்பெண்கள் வாழ்க்கையை பற்றி யோசிச்சு ஒரு ட்வீட் போட முடியவில்லை என்றால், நீங்கள் என்ன பெண்ணியவாதி ? உங்களை பேசியே ஆக வேண்டுன் என சொல்லவில்லை. இதற்கு பேசாவிட்டால் எதற்குமே பேசாதீர்கள். நித்தியை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? நீங்கள் நித்திக்கும் ரசிகையா ?’’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.