பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருக்கும் கமல் - அரவிந்த் கேஜ்ரிவால் சந்திப்பு...(வீடியோ)

Sep 21, 2017, 3:12 PM IST



தமிழக அரசியல் சூழல் குறித்து நடிகர் கமலஹாசன், கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளம் மூலமாக பல்வேறு அரசியல் கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.  கமலஹாசன் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. 

ரஜினி மற்றும் கமலஹாசனின் அரசியல் பிரவேச முடிவுக்கு ரசிகர்களும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நிலையில், தற்போது உலக நாயகன் கமலஹாசனை சந்திக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமலின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். இவரை சென்னை விமான நிலையத்திற்கு சென்று கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் வரவேற்றார்.

கமல் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலின் சந்திப்பு பொதுமக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.