அரைநிர்வாண போராட்டம் செய்ததால் நேர்ந்த கொடுமை...! ஸ்ரீலீக்ஸ் நடிகை கதறல்...!

Apr 9, 2018, 1:08 PM IST



பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி... பட வாய்ப்புகளுக்காக இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் அதிகமாக உள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார். மேலும் நயன்தாராவை வைத்து அனாமிகா என்கிற படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சேகர் கம்முலு படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு இயக்குனர் சேகர் கம்முலு, இதனை முற்றிலும் மறுத்ததுடன் இந்த நடிகை மீது வழக்கு தொடரப்போவதாக எச்சரித்தார். இதற்கெல்லாம் சற்றும் அசராத ஸ்ரீ சட்ட ரீதியாக இவரை சந்திக்க தயார் என்றும், இவரை குற்றவாளி என நிரூபிக்கும் ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஒரு நடிகரின் பெயரை வெளியிடாமல்... அந்த நடிகர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடித்து வருவதாகவும், நடிகைகளிடம்  உணர்வுப் பூர்வமாக அணுகி அவருடைய வலையில் எளிதில் சிக்க வைத்து பல நடிகைகளின் வாழ்கையை சீரழித்து வருவதாக தெரிவித்தார். 

இந்நிலையில் தனக்கு சினிமா துறையில் வாய்ப்புகள் இல்லை என மறுக்கப்படுவதாக கூறி, திடீரென  சாலைக்கு வந்து தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணபோராட்டத்தில் ஈடுபட்டார். 

தன்னை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்ள முடியாது என சொன்னதற்காக இப்படி ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் அப்படி போராட்டம் செய்ததை தொடர்ந்து, ஸ்ரீரெட்டி இருக்கும் வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற கூறிவிட்டாராம்.

அவர் எப்படியெல்லாம் பேசினார் தெரியுமா, அதிகாரத்தில் உள்ளவர்களின் வேலை ஆரம்பமாகிவிட்டது என்று தன்னுடைய பேஸ்புக்கில் கண்ணீரோடு பதிவு செய்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.