Actor Vinayakan : ஒருத்தி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விநாயகன் மீடூ குறித்து அளித்த பதில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மலையாள நடிகர் விநாயகன்
தமிழில் தனுஷின் மரியான், விஷால் நடித்த திமிரு, கார்த்தியின் சிறுத்தை போன்ற படங்களில் நடித்துள்ளவர் விநாயகன். ம்லையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் இவர், தற்போது ஒருத்தி என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது இதில் நடிகர் விநாயகன், நடிகை நவ்யா நாயர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகர் விநாயகன் மீது முன்னாள் மாடல் அழகி ஒருவர் மீடூ குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். ஒருத்தி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விநாயகனிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது. இதற்கு நடிகர் விநாயகன் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பி உள்ளதோடு மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவும் மாறியது.
மீ டூ பற்றி சர்ச்சை பதில்
அவர் கூறியதாவது: மீடூ பற்றி கேரளாவில் பலரும் பேசி வருகிறார்கள். அது என்னதுன்னு எனக்கு தெரியாது. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உடல் உறவு வைத்துக் கொள்வது தான் மீடூ வா?. ஒரு பெண்ணைப் பார்க்கும் போது அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்திருந்தால், நான் அந்தப் பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உடல் உறவு வைத்து கொள்வேன். விருப்பமில்லை என்று சொன்னால் அங்கிருந்து சென்றுவிடுவேன்.
இதுவரை நான் பத்து பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். உங்களுடன் உடல் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன்..? என்று நான் கேட்ட 10 பெண்களில் அவளும் ஒருத்தி எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகர் விநாயகன். அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு மகளிர் அமைப்பினரும் திரையுலக பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... vetrimaran : இந்த உலகத்தில் மய்யம் என்று ஒன்று கிடையாது - பட விழாவில் அரசியல் பேசி அதிர வைத்த வெற்றிமாறன்