தந்தையின் இந்த நல்ல குணத்தை பின்பற்றி வளர்த்த நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான மாணவர்களின் கல்வி கனவை நிறைவேற்றி வருகிறார்.
நடிகர் சிவக்குமார் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 10ம் வகுப்பில் முதலிட்ம் பிடிக்கும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசளித்து வருகிறார். தந்தையின் இந்த நல்ல குணத்தை பின்பற்றி வளர்த்த நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான மாணவர்களின் கல்வி கனவை நிறைவேற்றி வருகிறார். சூர்யாவின் இந்த அமைப்பால் ஏராளமான ஏழை மாணவர்கள் டாக்டர், இன்ஜினியர் என எட்டா உயரங்களை கூட எட்டிப்பிடித்துள்ளனர்.
அப்படி சூர்யா உதவிய ஏழை மாணவிகளில் ஒருவர் கிருஷ்ணவேணி. 12 வயதிலேயே பெற்றோரை இழந்த கிருஷ்ணவேணி, படிப்பில் நல்ல சாமர்த்தியசாலி. மறைத்த தனது தாய், தந்தையின் டாக்டர் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டுமென முழு மூச்சில் செயல்பட்டார். ஆனால் மருத்துவ படிப்பிற்காக கிருஷ்ணவேணி எழுதிய நுழைவுத்தேர்வில் அரைமார்க் வித்தியாசத்தில் அவருக்கான வாய்ப்பு கை நழுவி போனது.
Kudos Bro.. 👏👏 pic.twitter.com/25yKTgsFm3
— Ramesh Bala (@rameshlaus)ஆனாலும் மனம் தளராமல் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனிடம் இருந்து உதவி பெற்ற கிருஷ்ணவேனி, இப்போது மருத்துவராக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது பல ஏழை மாணவர்களுக்கு எட்டா கனியாக மாறி வரும் கல்வியை, அவர்கள் எட்டிப்பிடிக்க உதவும் ஏணியாக செயல்படும் அகரம் பவுண்டேஷனுக்கும், நடிகர் சூர்யாவிற்கும் சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.