அதிரடி முடிவை எடுத்த "சிம்பு"....!  ஏன் இந்த  அதிர்ச்சி தகவல்..?! 

Jun 6, 2018, 1:57 PM IST



அதிரடி முடிவை எடுத்த  சிம்பு.....!  ஏன் இந்த அதிர்ச்சி தகவல்..?! 

நடிகர் சிம்பு என்றாலே அவருக்கென தனி ஸ்டைல் தான்...அவருக்கென  பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்

நடிகர் சிம்பு பற்றி அவ்வபோது சில பல கிசு கிசு பேசப்பட்டு வருவது வழக்கம்....அதே போன்று ஷூட்டிங் செல்வதில் சற்று சோம்பேறித்தனம்  காண்பிப்பார்.

சரியான நேரத்திற்கு ஷூட்டிங் செல்வதில்லை இது போன்ற குற்றச்சாட்டு  எழுவது உண்டு...

ஆனாலும் ஜல்லிக்கட்டு விவகாரதிகும், காவிரி மேலாண்மை ஆணையம்  அமைக்கும் விவகாரத்திலும் நடிகர் சிம்புவின் பங்கு அதிகம் என்றே சொல்லலாம்...

இந்நிலையில் மணிரத்தினம் படத்தில் நடித்து வரும் சிம்பு, ஒரு வீடோயோவை வெளியிட்டு உள்ளார்

"மணிரத்தினம் படத்தில் நடித்தது தனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது...அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன்...இவருடைய படத்தில் நடிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டேன் என தெரிவித்து உள்ளார்

இனிமேல் அவர் படத்தில் நடிக்க முடியுமா என்ற ஆவல் இருந்தது...  பின்னர் ஒரு வழியாக செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

என் மீது எப்போதுமே குற்றச்சாட்டு வந்த வண்ணமே உள்ளது....அதில் குறிப்பாக நான் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் செல்வதில்லை என்று.. ஆனால் நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன்..நான் பிறந்ததிலிருந்தே சினிமாவில் தான் உள்ளேன்...அதை விட்ட வேற எதுவும் எனக்கு தெரியாது....

என்னால் ரோபா மாதிரி வேலை செய்ய முடியாது..என் மீது தப்பு என்றால் நான் மன்னிப்பு கேட்பேன்..இல்லாத ஒன்றுக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..

இதன் பிறகு நான் நடிப்பேனா..சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை.." என வேதனையோடு தெரிவித்து உள்ளார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்புவின் மன நிலைமை ஏன் இப்படி உள்ளது ? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் உள்ளனர் அவருடைய ரசிகர்கள்...

மேலும், நடிகர் சிம்புக்கு தமிழ் நாட்டை விட தற்போது கர்நாடக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது.

ஆனால் நடிகர் சிம்பு ஏன் இதுபோன்று வீடியோ வெளியிட்டு வருத்ததுடன்  பேசி உள்ளார் என்று தெரியவில்லை என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்து உள்ளனர்