ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தனது 52 வயதில் 5வது திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட்டை கலக்கி வருகிறார்.
அந்த வகையில் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தனது 52 வயதில் 5வது திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட்டை கலக்கி வருகிறார். ஜோன் பீட்டர் என்ற 75 வயது தயாரிப்பாளரை கடந்த 20ம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள மாலிபுவில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் இசைக்கலைஞர் டோமி லீ, பாடகர் கிட் ராக் ஆகியோருடன் திருமண வாழ்க்கையில் தோல்வி கண்டார். பிறகு 3வது முறையாக விளையாட்டு வீரர் ரிக் சாலமனை 2007ம் ஆண்டு திருமணம் செய்து, அதே ஆண்டு டைவர்ஸ் பெற்றார். மீண்டும் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்பே பிரிந்தனர்.
இப்ப இது பமீலாவுக்கு 5வது கல்யாணமாக இருந்தாலும், இந்த ஹாலிவுட் பியூட்டி முதன் முதலில் டேட்டிங் போனது என்னமோ ஜான் பீட்டர் கூட தானாம். பேட்மேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர் உடன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு முதன் முறையாக டேட்டிங் சென்றுள்ளார் பமீலா. என்ன காரணமோ அப்போ நடக்காத இவங்களோடு கல்யாணம் இப்ப அமைதியான முறையில் நடந்து முடிச்சிருக்கு. இந்த புதுமண தம்பதிக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.