Dec 31, 2018, 3:22 PM IST
சமீபத்தில் நடந்த முடிந்த மிஸ் ஆப்பிரிக்கா 2018 அழகி போட்டியில், வெற்றி வாகை சூடிய அழகி தலையில் ரசிகர்கள் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான, அழகி போட்டியில், காங்கோ நாட்டு அழகி டார்காஸ் கேஸிண்டே என்பவர் அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
அழகிகளின் அணிவகுப்பு முடிந்த பின் வெற்றியாளர் டார்காஸ் கேஸிண்டே என்பது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் போது சக போட்டியாளர் ஒருவர் இவரை அணைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனை ரசிகர்கள் மத்தாப்பு, கொளுத்தி கொண்டாடினர். அப்போது ஒரு ரசிகர்கள், இவரின் தலையில் அருகே நெருப்பை கொண்டு செல்ல, நெருப்பு பொறி பட்டு அவருடைய முடி எரிய தொடங்கி விட்டது.
எனினும் விழா குழுவினர் விரைந்து செயல்பட்டு டாஸ்மாக்கின் தலையில் பற்றியிருந்த நெருப்பினை அணைத்தனர். இதையடுத்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதுமே இது போன்ற சம்பவம் அரங்கேறியதால் சிறிது நேரம் கழித்து இவருக்கு கிரீகீடம் சூட்டப்பட்டது. தற்போது, இதன் காணொளி காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.