சீனப் பொருளதார மந்தநிலை: இந்தியாவுக்கான வாய்ப்புக் கதவுகள் திறக்கின்றன

By Pothy Raj  |  First Published Mar 22, 2022, 12:37 PM IST

சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, புவி-பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றால் சப்ளையிலும், புதிய தொழில்வாய்ப்புகளும் இந்தியாவுக்கு திரும்பும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, புவி-பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றால் சப்ளையிலும், புதிய தொழில்வாய்ப்புகளும் இந்தியாவுக்கு திரும்பும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கான வாய்ப்பு

Tap to resize

Latest Videos

சீனாவின் பொருளாதார மந்தநிலை குறித்தும் இதனால் வாய்ப்புகள் இந்தியாவுக்கு எவ்வாறு செல்லும் என்பது குறித்து ஹாங்காங் போஸ்ட் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியப் பொருளாதாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களால், எளிதாகத் தொழில்செய்யும் சூழல் மேம்பட்டுள்ளது. இந்தயாவின் எழுச்சி ஆசியாவில் சீனாவுக்கு மாற்றாக இருக்கிறது. உள்கட்டமைப்பு, போக்குவரத்து, கல்விச்சூழல், கல்வியறிவு, பொதுசுகாதாரம், இ-வர்த்தகம், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, திறன்மிக்க தொழிலாளர்கல் என அனைத்திலும் இந்தியா மேம்பட்டு ஆசியாவில் உள்ளநாடுகளில் முன்னோக்கி நகர்ந்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி

2022ம் ஆண்டின் முதல் காலாண்டு நிறைவுபெற்றுள்ளது. ஆனால், சீனாவின் பொருளாதாரச் சூழல் இன்னும் இயல்புக்கு வரவில்லை. ரியல்எஸ்டேட் விலை தொடர்ந்து சிக்கலாக இருக்கிறது, பணவீக்கம் தொடர்ந்து உயர்வாக இருந்து வருகிறது. அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சீனாவுக்கான பிரச்சினை, சீனாவை அடிப்படையாக வைத்திருக்கும் சப்ளையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் ஏற்படும் மோதல் அது அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

இலங்கை, பாகிஸ்தானில் சீனாவின் தடமும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சீனாவிலிருந்து நிதி கிடைப்பதில் சிக்கல், பொருளாதாரச் சிக்கலால் பிஆர்ஐ பார்டனர்களும் பல தடைகளைஎதிர்கொள்கிறார்கள். சீனாவில் அதிகரி்த்துவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் இழுத்துப்பிடிக்கும். 

ஒமைக்ரான் வைரஸ்

குறிப்பாக சீனாவின் முக்கிய தொழில்நகரங்களான ஷென்ஜென், சாங்சுன் ஆகியவற்றில் ஏராளமான தொழிற்சாலைகள் ஒமைக்ரான் பரவலால் மூடிக்கிடக்கின்றன. சீனாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் 11சதவீதம் இங்குதான் நடக்கிறது.

சரியான தேர்வு

ஆனால், இந்தியா தற்போது உலகளவில் உற்பத்திக்கான சரியான தளமாக வளர்ந்து வருகிறது, மாறி வருகிறது. சீனாவுக்கு மாற்றாக தொழில் நிறுவனங்கள் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்தியா சரியான தேர்வாக இருக்கிறது.

அமெரிக்காவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தொழில்நுட்பசெயல்பாடுகளை அமைத்துள்ளன, இந்தியாவின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப திறன்களையே நம்பியுள்ளன.

முன்னேற்றம்

இந்தியஉற்பத்தி துறை பல்வேறு பிரிவுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ரசாயனம், மருந்துத்துறை, பிளாஸ்டிக்ஸ், ஜவுளித்துறை, உருக்கு ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இப்போத புதிய மற்றும் மாறுபட்ட தொழில்பிரிவுகளிலும் தடம் பதிக்க இந்தியா முயல்கிறது. குறிப்பாக மொபைல் போன் தயாரிப்பு, செமி கன்டக்டர், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, சப்ளை, ஆட்டமொபைல் உதிரிபாகங்கள், பேட்டரீஸ், தொலைத்தொடர்பு உபகரணங்கள், உணவுப்பொருட்கள், பணப்பொருட்கள், மின்னணு பொருட்கள், சோலார் பேனல், பொம்மைகள் உற்பத்தியிலும் முன்னேறி வருகிறது. 

இந்த துறைகளில் எல்லாம் சீனா தற்போது சிக்கல்களை சந்தித்து வருகிறது. பொருளாதார வேகக்குறைவு, அதிகமான கூலி ஆகியவற்றால் இந்தப் பிரிவுகளில் சீனா படிப்படியாக தனது பிடியை கைவிடுகிறது.

வேலைவாய்ப்பு பிரச்சினை

2022ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 5 முதல் 5.5 சதவீதம்இருக்கும். சீன இளைஞர்ளுக்கு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்காது என்று பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரியல்எஸ்டேட், தொழில்நுட்பம், தொழில்நுட்பநிறுவனங்கள மீதான சீன அரசின் அடக்குமுறையால் முதலீட்டுவருகையும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் இ்ந்ததுறையில் குவியும் முதலீடுகள் அனைத்தும் இந்தியா பக்கம் திரும்பும். 

வாய்ப்புக் கதவுகள்

சீனாவில் தொழிலாளர்களுக்கு அதிக கூலி, தொழிலாளர் பற்றாக்குறையால், இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கு வாயப்புகள் திரும்புகின்றன. தொழிலாளர்களுக்கு குறைவான கூலி, அதிகமான தொழிலாளர்கள் இருப்பதால் வாய்ப்புகளை இந்தியா எளிதாகக் கவர்கிறது. குறிப்பாக மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா போன்ற திட்டங்கள் உலகளவில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கிறது
இவ்வாறு ஹாங்காங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

 

click me!