Asianet News TamilAsianet News Tamil

பூச்சி தாக்குதலை தடுக்க இந்த மேலாண்மை முறைகளை கையாண்டலே போதும்...

You have to handle these management methods to prevent pest attack ...
You have to handle these management methods to prevent pest attack ...
Author
First Published Jun 26, 2018, 1:48 PM IST


பூச்சி தாக்குதலை தடுக்க 

** மண் பரிசோதனை மூலம் சத்து பற்றாக்குறையை அறிந்து, அதன் அடிப்படையில் தேவையான உரமிட வேண்டும்.

** சுத்தமான மற்றும் சான்றளிக்கப்பட்ட விதைகளை பூஞ்சைக்கொல்லி மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தால் விதையின் மூலம் பரவும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

** செடி கொடி கழிவுகளை நீக்குதல், வரப்புகளை சீர்படுத்துதல், மண் தயாரிப்பு மற்றும் பல நிலையில் உள்ள பூச்சிகளைக் கொல்லக்கூடிய கோடைகால ஆழ உழுதல் முதலிய முறைகளை கையாண்டு பூச்சி தாக்குதலை தவிர்க்கும் வண்ணம் நாற்றங்கால் அல்லது நடவு வயலை தயார் செய்யவேண்டும். வயலில் முறையான வடிகால் அமைப்பு இருக்க வேண்டும்.

** பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் அல்லது தடுக்கும் வகையிலான விதை இரகங்களைத் தேர்ந்தெடுப்பது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

** பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும் பருவகாலங்களை தவிர்க்கும் வகையில் விதைத்தல் மற்றும் அறுவடையினைத் திட்டமிடவேண்டும்.

** பூச்சிக்கு உணவு ஆகாத மாற்று பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். இது மண் மூலம் பரவும் நோயைத் தடுக்கும்.

** செடிகளுக்கு இடையே போதிய இடைவெளி, பயிர்களுக்கு ஆரோக்கியத்தை தந்து பூச்சித் தாக்குதலையும் தவிர்க்கும்.

** போதிய உரம் இடவேண்டும். தொழு உரம் மற்றும் உயிரி உரம் பயன்படுத்துதல் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

** சிறந்த களை மேலாண்மை வேண்டும். எனெனில் களைச்செடிகள் பயிர்களுக்கான சத்துக்களை உறிஞ்சுவது மட்டுமல்லாமல் பல பூச்சிகளுக்கு புகலிடம் அளிக்கின்றன.
    

Follow Us:
Download App:
  • android
  • ios