Asianet News TamilAsianet News Tamil

கால்நடைகளின் தீவன தேவை பூர்த்தி செய்ய தீவனப் புல் இருக்கு…

With these grass we can solve the animals done need
With these grass we can solve the animals done need
Author
First Published Aug 9, 2017, 1:08 PM IST


 

கால்நடைகளை கட்டி வைத்து மேய்க்கும் காலம் ஆரம்பித்த பின் விவசாயி முதலில் நட ஆரம்பித்த பசுந்தீவனம் இந்த தீவனப்புல்.  

தீவனப்புல் என்பது நேப்பியர் புல் மற்றும் கம்பு இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. இதில் கோ - 1, 2, 3, 4, 5 என்ற பல ரகங்கள் உண்டு. 

ஆடு, மாடுகள் இந்த தீவனப்புல்லை விரும்பி உண்னும். தண்டுகளை கூட மிச்சம் வைக்காமல் தின்று விடும். Chaff cutterல் வெட்டி போட தேவை இல்லை. நிலத்தில் இருந்து அப்படியே அறுத்து போடலாம்.

தீவனப்புல் நடவு செயும்போது இரண்டு அடி வரிசைக்கு வரிசை இடைவெளி இருக்குமாறு நடவேண்டும்.  கரும்பு நடவு செய்வது போல் வரிசையாக நடவு செய்ய வேண்டும்.

தீவனப்புல் கரனை முளைத்த உடனே ஒரு களை எடுத்து மண் அனைக்க வேண்டும். மண் தன்மைக்கு ஏற்ப நீர் பாசனம் செய்யவேண்டும். இயற்கை உரமான அமிர்தகரிசல் கொடுக்கலாம். தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு அறுவடை செய்யலாம்.

கறவை மாடுகளுக்கு நாள் ஒன்று பதினைந்து கிலோ பசுந்தீவனம் தேவை. ஒரு மாட்டிற்கு குறைந்தது 20 இருபது சென்ட் அளவில் பசுந்தீவனம் நடவு செய்ய வேண்டும். பசுந்தீவனங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் கறவை மாடுகள் ஊட்டமுடன் வளர வழி வகுக்கும். 

இந்த தீவனப் புல் தொடர்ந்து கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் அதிகம் பால் கறக்கும் பசுக்கள். அவற்றின் சினை பிடிக்கும் சுழற்சி ஊக்குவிக்கப்படும். இந்த கரனைப்புல் அதிகம் கொடுப்பது மூலம் பால் கறக்கும் மாடுகளுக்கு அடர்தீவன தேவை குறையும்.

Follow Us:
Download App:
  • android
  • ios